7 மாதங்களுக்குக் பிறகு திறக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணனின் காதல் கோவில் prem mandir, Mathura
பிருந்தாவனத்தில் கண்ணனின் காதல் கோயிலான பிரேம் மந்திர் சுமார் ஏழரை மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பிருந்தாவனத்திற்கு வரும் பக்தர்கள் பிரேம் மந்திரை பார்ப்பதில் தீராக் காதல் கொண்டவர்கள்.
தற்போது பிரேம் மந்திர் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையில் திறந்திருக்கும். பிறகு மாலை 5:00 மணிக்கு திறக்கும் கண்ணனின் அன்பான ஆலயம் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பிரேம் மந்திருக்கு வருபவர்கள் அனைவரும், கோவிட் -19 இன் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்; முகக்கவசம் அணியாத எவரும் கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், கோவில் வாசலில் அனைத்து பக்தர்களுக்கும் வெப்பப் பரிசோதனை செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் அனைத்து பக்தர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
லாக்டவுனுக்கு முன்பு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கண்ணனை தரிசித்துச் செல்வார்கள். கோவில் வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளின் கண்கவர் காட்சிகள் பக்தர்களை கண்ணன் மீது அதிக காதல் கொள்ளச் செய்கிறது.
ராதையின் கண்ணன்
கோபியர் கொஞ்சும் கோபால கிருஷ்ணனின் லீலைகள் நடைபெற்ற இடம்...
ராச லீலைகளின் பிறப்பிடம்
காதல் ரசம் சொட்டும் இடம்
கோவில்களின் நகரம் மதுராவின் உன்னத ஆலயம்
காதல் கண்ணனின் அன்புக் கோவில்
பிரேமமான ஆலயம் பிரேம் மந்திர்