முழுக்க அரசியல் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்! அதுவும் இவரது இயக்கத்தில்?
தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். அவரது படங்களுக்கு மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்று படமாக அமரன் உருவாகிறது. மேலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களில் நடிப்பதற்கு முன்பே ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த புராஜெக்ட் நடைபெறவில்லை. தற்போது வெங்கட் பிறகு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி வருகிறார். வரும் செப்டம்பர் மாதம் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விரைவில் இவர்கள் இருவரும் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும், இது முழுக்க முழுக்க அரசியல் சம்பத்தப்பட்ட கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.