தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எவ்வளவு கோடி தெரியுமா?
)
கடந்த 2006 -ம் ஆண்டு தமிழில் வெளியான கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் தமன்னா. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
)
பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தார் தமன்னா. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸில் கிளாமராக நடித்திருந்தார்.
)
ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் நடனம் ஆடி இருந்தார் தமன்னா. இந்த பாடல் மிகப்பெரிய அளவு ஹிட் ஆனது. மீண்டும் கோலிவுட்டில் நுழைய இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் பாலிவுட்டில் இதுவரை அவர் நடித்திடாத புதிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தொடங்கி உள்ளார். இதனால் தற்போதுள்ள 2K கிட்ஸ்களும் தமன்னாவின் ரசிகர்களாக மாறி உள்ளனர்.
ஒரு படத்திற்கு 2 கோடிக்கும் கம்மியாக சம்பளம் வாங்கி கொண்டிந்த தமன்னா, தற்போது 5 கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.