Suriya: கங்குவாவை தொடர்ந்து பொங்கலுக்கு வெளியாகும் சூர்யா 44 படம்?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிக்கும் கேங்ஸ்டர் படமான 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இப்படத்தில் ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், சந்தோஷ் நாராயணனின் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பொங்கலுக்கு படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 44' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு அஜித்தின் 'விடாமுயற்சி' அல்லது 'குட் பேட் அக்லி' வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துடன் சூர்யா 44 படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படமும் பொங்கலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் கார்த்திக் சுப்பராஜ் தான் கதை எழுதியுள்ளார்.
எனவே சூர்யா 44 படம் பொங்கலுக்கு வெளியாவதில் நிறைய சிக்கல் உள்ளது. மேலும் படம் கோடை விடுமுறையில் தான் வெளியாகும் என்று இயக்குனர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.