அகிலன் பட நாயகி தான்யா... இவரின் உண்மை பெயர் தெரியுமா?
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/03/16/278636-tttr1.jpg?im=FitAndFill=(500,286))
பழம்பெரும் நடிகர் ரவிசந்திரனின் பேத்திதான், தான்யா எஸ். ரவிசந்திரன்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/03/16/278635-tttr2.jpg?im=FitAndFill=(500,286))
இவரை முதன்முதலில் மிஷ்கின் தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக தேர்வு செய்தார். ஆனால், அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/03/16/278634-tttr3.jpg?im=FitAndFill=(500,286))
மேலும், அவரது இயற்பெயர் அபிராமி. மிஷ்கின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது பெயரை தான்யா என மாற்றிக்கொண்டார்.
இவர் 2016இல் சசிகுமாருடன் நடித்து வெளியான பலே வெள்ளையத்தேவா படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து, ராதா மோகன் இயக்கத்தில் 2017இல் பிருந்தாவன் படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
கருப்பன், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர், தெலுங்கிலும் நடித்தார். இவர் கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட் வெப்-சீரிஸிலும் நடித்திருந்தார்.
கடந்த வாரம் வெளியான அகிலன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்தில் 48 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.