AI: பங்குச் சந்தையிலும் பட்டையைக் கிளப்பும் செயற்கை நுண்ணறிவு! ஒரு நாளில் பில்லியனராகலாம்!
தொழில்நுட்ப புரட்சியால் உருவாகிவரும் நவீன மாற்றங்கள் வாழ்க்கையை இலகுப்படுத்துகிறது. அதில் ஏஐ எனப்படும் செயற்கைத் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் அதிகமாக உணர்கிறோம்
செயற்கைத் தொழில்நுட்பத்தின் பங்கு வாழ்க்கையில் முக்கியமானது என்றால், ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்பும் தடாலடியாக உயர்கின்றன. இந்த தொழில்நுட்பம் தொடர்புடையவர்களுக்கு அபாரமாக லாபம் வந்து கொட்டுகிறது
AI சிப்மேக்கர் நிறுவனமான என்விடியா (Nvidia) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஒரே ஆண்டில், என்விடியா கார்ப் பங்குகள் 251.55 சதவீதம் அதாவது ரூ.519.58 அதிகரித்துள்ளன. பிப்ரவரி 21, 2023 அன்று, NVIDIA Corp இன் பங்கு ரூ.206 அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அமேசான் தற்போது உலகின் நான்காவது மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கின் சொத்து மதிப்பும் அதிரடியாக உயர்ந்துள்ளது
உலகின் 500 பணக்காரர்களின் பட்டியலில் 30 பேரின் நிகர மதிப்பு அதிகரிப்பு AI பங்குகள் காரணமாக வந்துள்ளது. அமேசான் ஆல்பபெட்டை பின்தள்ளிவிட்டது
என்விடியாவின் போட்டி நிறுவனமான Advanced Micro Devices Inc இன் பங்குகளும் வலுவான உயர்வைக் கண்டுள்ளன, இதன் காரணமாக நிறுவனத்தின் CEO Lisa Su இன் நிகர மதிப்பு 1.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துவிட்டது. கடந்த ஒரு வருடத்தில் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளன
மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 41.9 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது