பௌர்ணமி அன்று இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்கவும் !!

Fri, 15 Nov 2024-12:46 pm,

நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று ஐப்பசி பௌர்ணமி . இந்நாளில் துரதிர்ஷ்டம்  நிகழாமல் இருக்க இந்த விஷயங்கள் செய்வதைத் தவிர்க்கவும். 

 

ஐப்பசி பௌர்ணமி  பரம்பொருளாகிய ஈசனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் சிறப்பு நாள். இந்த நாளில்  சந்திரனின் சாபம் மட்டுமில்லாமல், நம்முடைய தோஷங்கள், பாவங்கள், துன்பங்கள், சாபங்கள் உள்ளிட்ட அனைத்தும் போக்கக் கூடிய நாள். 

பௌர்ணமி அன்று சிவபெருமான் கோவிலுக்குச் சென்று அன்னாபிஷேக தரிசனத்தைக் கண்டால் சகலவள்ள நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதி மிகவும் சிறப்பான ஒன்று. இதில் முக்கியமாக ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி  ஒருபிரசிதிப்பெற்ற தனி மகத்துவம் இதற்கு உண்டு.

 

சில விஷயங்கள் அல்லது செயல்கள் இந்த பௌர்ணமி நாளில் செய்வதைத் தவிர்க்கும் கட்டாயம் உள்ளது. இந்த சில விஷயங்கள் உங்கள் வீட்டில் செய்யாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

சிவபெருமான் அருள் முழுமையாகக் கிடைக்க  இவற்றைச் சரியாகப் பின்பற்றினால்  நிச்சயம் அருள் பெற்று பலவித நன்மைகள் உங்கள் வீட்டில் உண்டாகும்.

உணவு என்று உங்களிடம் வந்து கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாதீர்கள். மேலும் உணவு இல்லையென்றாலும் உங்களால் முடிந்த பணம் கொடுத்து உதவவும். பௌர்ணமி அன்று யாரையும் திட்டவோ, அவமதிப்பதோ அல்லது மனம் புண்படுமாறு பேசுவதோ இருந்தால் அதை முற்றிலும் பௌர்ணமி அன்று செய்ய வேண்டாம்.

பௌர்ணமி அன்று அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். போதை மற்றும் தகாத தீயசெயல்கள் இந்த நாளில் செய்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த நாளில் வெள்ளி வாங்கவோ அல்லது மற்றொருவருக்குக் கொடுக்கவோ மற்றும் தானங்கள் செய்வதை தவிர்த்துவிடவும்.

வீடு சுத்தமாக இருக்க வேண்டும், வீட்டை இருளாக வைக்கக்கூடாது,  பெருமாளுக்கு உரிய நாள் இந்த நாள், வீட்டைச் சுத்தமாக வைப்பதால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் நுழைவாள்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link