Airtel சிம் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக இந்த பெரிய நன்மை கிடைக்கும்: தகவல் இதோ
ஏர்டெல் (Airtel) தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களுடன் இலவச கால ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகையின் கீழ் இரண்டு திட்டங்கள் உள்ளன. 279 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் பல சலுகைகளுடன் ரூ .4 லட்சம் மதிப்பிலான கால ஆயுள் காப்பீடு கிடைக்கும். ரூ .179-க்கு ரீசார்ஜ் செய்தால் 2 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு கிடைக்கும்.
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் 'ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்' (EDLI Insurance cover)-இன் கீழ் காப்பீட்டு வசதியையும் பெறுகின்றனர். இத்திட்டத்தில், அதிகபட்சமாக ரூ .7 லட்சம் காப்பீட்டுத் தொகை இபிஎஃப்ஒ-வால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு வழங்கப்படுகிறது.
LPG இணைப்பு உள்ள வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் கீழ், எரிவாயு கசிவு அல்லது எல்பிஜி சிலிண்டர் வெடித்ததால் எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் ரூ .50 லட்சம் வரை காப்பீடு நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
அரசாங்கத் திட்டமான ஜன் தன் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குடன் கிடைக்கும் ரூபே டெபிட் கார்டில் 30 ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடும், இரண்டு லட்சம் ரூபாய் தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டமும் உள்ளது. அதாவது, ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள், இதன் மூலமும் இரண்டு லட்சம் வரை பலன் பெறலாம்.
PNB அதாவது பஞ்சாப் நேஷனல் வங்கியின் 'ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டில்' ரூ .2 லட்சம் வரை இலவச விபத்து காப்பீடு கிடைக்கிறது. இதனுடன், இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.