வயநாடு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல்! நிலநடுக்கப் பாதிப்பில் நிவாரணம்...

Thu, 01 Aug 2024-9:00 am,

இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இலவச டெலிகாம் சலுகைகளை வழங்குவதாக பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் கேரளாவில் உள்ள வயநாடு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

வயநாட்டில் பெய்த கனமழையால் மேப்பாடி பகுதியில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை என பல கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால், வீடுகள் மண்ணில் புதைந்தன.

மக்கள் உறக்கத்தில் இருந்த நள்ளிரவில் வீடுகள் புதைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், காவல் படையினர், மீட்புக்குழுவினர், ராணுவத்தின் மோப்பநாய்கள் என மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

பேரழிவின் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, டேட்டா, வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குகிறது. 

ப்ரீபெய்டு மட்டுமல்ல, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஏர்டெல் மொபைல் சேவை அணுகலை நீட்டித்துள்ளது. ஆனால், இந்த சலுகைகள் கேரளாவில் உள்ள வயநாடு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

 

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு நிவாரண பலன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு பேரழிவுக்குப் பிறகு மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. ரீசார்ஜ் முடிந்துவிட்டால்,  3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சேவைகளை வழங்கும் ஏர்டெல், வாடிக்கையாளர்கள் தினசரி 1 ஜிபி மொபைல் டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறலாம்

 

போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, வயநாடு வாடிக்கையாளர்களுக்கான பில் செலுத்தும் காலக்கெடு 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, கட்டணம் செலுத்தாவிட்டாலும், அடுத்த ஒரு மாதத்திற்கு டெலிகாம் சேவைகளை பயன்படுத்தலாம். 2 மாதங்களுக்கான கட்டணத்தை ஒன்றாக செலுத்தினால் போதும்  

பொறுப்புத்துறப்பு: இணையத்தில் வெளியான செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link