கோட் சூட்டுடன் கெத்தாக நிற்கும் அஜித்! விடாமுயற்சி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் துபாயில் நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
விடாமுயற்சி படம் பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், சமீக நாட்களாக அஜித்தின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் சக நடிகர்களுடன் அஜித் வெளியில் சென்றபோது எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தில் அஜித் கோர்ட் சூட் போட்டு உள்ளார். இரவு விருந்திற்கு செல்லும் போது இந்த படங்களை எடுத்துள்ளனர்.