திருச்சியில் கெத்துக்காட்டிய அஜித்தின் மாஸ் புகைப்படங்கள்
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். அவரை பார்க்க அப்பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்
கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரசிகர்கள் குவிந்ததை அறிந்த அஜித்குமார், அவர்களை பார்க்க முடிவெடுத்தார். உடனடியாக ரைபிள் கிளப் கட்டடத்தின் மேல்மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.
அஜித்தை பார்த்ததும், ரசிகர்கள் ஆரவாரக் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பதால் அஜித்தும் மகிழ்ச்சியடைந்தார்.