இந்த 6 பழங்களை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது!
தர்பூசணி: அதிகளவு நீர்சத்து கொண்ட தர்பூசணி வயிற்றில் அமிலத்தன்மை அளவை அதிகரிக்கலாம், இது எரிச்சல் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். அதே போல மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.
கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் உள்ளது. எனவே இவை செரிமான அமைப்பை கஷ்டப்படுத்தி, அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் ஜூசி அதன் சுவைக்கு பெயர் பெற்றது. இருப்பினும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலடையச் செய்யும்.
வாழைப்பழங்கள்: வாழைப்பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும் அவற்றில் அதிக மெக்னீசியம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகரிக்கும்.
தக்காளி: பல உணவுகளில் முதன்மையான பொருட்களாக தக்காளி சேர்க்கப்படுகிறது. இருப்பினும் தக்காளியில் அதிக அளவு டானிக் அமிலம் உள்ளது, இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. இவற்றில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது. இதனால் நெஞ்செரிச்சல், அழற்சிக்கு வழிவகுக்கும்.