இந்த ஸ்னாக்ஸ்களை சாப்பிட வேண்டாம்! மூளைக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்!
உருளைக்கிழங்கு சிப்ஸ்
உருளைக்கிழங்கு உணவுகளில் பயன்படுத்தப்பட்டாலும் சிப்ஸ் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. இவற்றில் அதிக கொழுப்புகள் உள்ளது. இவை மூளையில் வீக்கத்தை ஏற்படுத்த கூடும்.
தானியங்கள்
தானியங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, தொடர்ந்து இவற்றை சாப்பிடுவது அறிவாற்றலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வறுத்த உணவு
பக்கோடா, கோழி, பொரியல்கள், சமோசா போன்ற வறுத்த உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இவை மூளைக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
ஜூஸ்
கடைகளில் விற்கப்படும் ஜூஸ் அதிகம் சாப்பிட கூடாது. இவற்றில் அதிக சர்க்கரை சேர்க்கப்படும். எனவே மூளையின் சில செயல்பாடுகளை பாதிக்கும்.
மது
ஆல்கஹால் அதிகமாக குடிக்கும் போது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கலாம். மேலும் நரம்பு சம்பத்தப்பட்ட நோய்களை ஏற்படுத்த கூடும். இது வைட்டமின் பி1 குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
கேக்
கேக்குகளில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இவை உடல் மற்றும் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்த கூடும். எனவே இவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.