Gpay மூலம் ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்... இனி இந்த பிரச்னை வரும் - ஜாக்கிரதை மக்களே!
ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் - ஐடியோ, பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைலுக்கு ப்ரீபெய்ட் பிளான்களை ரீசார்ஜ் செய்ய அந்தெந்த நிறுவனங்களின் செயலிகளிலும், ஜிபே, போன்பே, பேடிஎம் மூலம் செயலிகளிலும் ரீசார்ஜ் செய்யலாம்.
அந்த வகையில் ஜிபே இனி ஒவ்வொரு ப்ரீபெய்ட் ரீசார்ஜிக்கும் Convenience Fee-ஐ வசூலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
அதாவது, ஜிபே அதிகபட்சமாக 3 ரூபாய் வரை கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறது என கூறப்படுகிறது.
X தளத்தில் டெக் தகவல்களை பகிரும் முகுல் சர்மா என்பவர் பதிவிட்டுள்ளார். அதில், ஜிபே செயலியில் 100 ரூபாய்க்குள்ளான ரீசார்ஜிற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்காது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ரூ.100 முதல் ரூ.200 வரையிலான ரீசார்ஜிற்கு 1 ரூபாயும், ரூ.200 முதல் ரூ.300 வரையிலான ரீசார்ஜிற்கு 2 ரூபாயும், ரூ.300க்கு மேலான ரீசார்ஜிற்கு 3 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது" என பதிவிட்டுள்ளார்.
ஆனால், இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இது பரந்தளவில் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.