ஆண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால்... குழந்தை பிறப்பு கடினமாகலாம் - உடனே கவனிங்க!

Fri, 11 Oct 2024-1:34 pm,

ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் (Testosterone Hormone) மிகவும் முக்கியமானதாகும். ஆண்களின் பாலியல் நாட்டம், விந்தணு உற்பத்தி உள்ளிட்ட பல விஷயங்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் முக்கியமானது. 

 

அதுமட்டுமின்றி, தாடி, மீசை போன்ற உடலின் முடி வளர்ச்சி, குரல் வளம் என அனைத்திற்கும் டெஸ்டோஸ்டிரோன் முக்கியமனதாகும். அந்த வகையில், டெஸ்டோஸ்டிரான் அளவு உடலில் குறைவாக இருந்தால் ஆண்களுக்கு பல பிரச்னைகள் வரும். அதிலும் திருமணமானவர்களுக்கு குழந்தை பிறப்பு (Problem in Child birth) மிகவும் கடினமாகும் 

 

உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதை ஆரம்பத்திலேயே சில அறிகுறிகளின் மூலம் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை மேற்கொண்டால் அதனை சீர்செய்ய இயலும். அந்த வகையில், இதன் முக்கிய அறிகுறிகளை இங்கு காணலாம். 

 

விறைப்பு தன்மையில் பிரச்னை: டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் தான் ஆணுறுப்பின் விறைப்பு தன்மைக்கு உதவக்கூடியது. ஆணுறுப்பு விறைப்பு தன்மையில் குறைபாடு ஏற்பட்டால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்திருக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் பாலியல் செயல்பாடும் குறையும், உங்களுக்கு குழந்தை பிறப்பு குறையும்.

 

ஆணுறுப்பின் அளவு குறையும்: அதேபோல், டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தால் ஆணுறுப்பின் அளவும் குறையும். இது சற்றே ஆபத்தான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. இதை மருத்துவர்களிடம் சொல்லக் கூச்சப்பட்டு தொடக்க காலத்திலேயே சிகிச்சை பெறாமல் சிலர் தவிர்த்துவிடுகின்றனர். இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். 

 

பாலியல் நாட்டம் குறையும்: டெஸ்டோஸ்டிரோன் அளவைு குறைந்தால் உங்களின் பாலியல் நாட்டமும் குறையும். இது பொதுவாக காணப்படும் அறிகுறிகளில் ஒன்றாகும். இதனை நீங்கள் விரைவாகவும் கண்டறியலாம். அதாவது, உங்கள் பார்ட்னர் உடன் உடலுறவு மேற்கொள்வது குறைந்தாலோ அல்லது பழைய நாட்டம் குறைந்தாலோ உங்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்திருக்க வாய்ப்புள்ளது. 

 

தசைகள் தளர்ச்சி அடையும்: இது ஆண்களுக்கு வெறும் பாலியல் சார்ந்த பிரச்னைகளை மட்டுமின்றி தசைகளிலும் பிரச்னையை உண்டாக்கும். டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்திருந்தால் தசைகள் வலுவிழந்து தளர்ச்சி அடையும்.

 

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. எனவே வாசகர்கள், இதுகுறித்த சந்தேகங்கள் உங்களுக்கு ஏற்பட்டால் அச்சப்படாமலும், தயங்காமலும் இதற்கான மருத்துவ வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link