நாம் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் சருமத்தை பாதிக்கும்! ஜாக்கிரதை!
பொது நிகழ்ச்சி அல்லது விருந்துகளுக்கு செல்லும் போது நாம் சில விஷயங்களை தவிர்ப்பது உடலுக்கு, தோலுக்கும் நன்மை பயக்கும்.
விருந்துகளில் ஜாலியாக இருக்கும்போது நேரம் போவதே தெரியாது. இதனால் தூக்கம் கெட்டு போகும். இதன் காரணமாக தோல் சோர்வாக இருக்கும். இது மட்டுமின்றி, தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுவதுடன், சருமத்தில் வயதான அறிகுறிகளும் கூட விரைவில் தோன்றும்.
வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் சோர்வில் மேக்கப்பை அகற்றுவதில் அலட்சியமாக இருப்போம். மேக்கப்புடன் தூங்குவது உங்கள் சருமத்தில் வயதான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
எல்லோரும் நண்பர்களுடன் சேர்ந்து அல்லது அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். ஆல்கஹால் உங்கள் உடலை நீரிழப்பு செய்யலாம், உங்கள் உடல் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
விருந்தில் நாம் அனைவரும் உணவு விஷயத்தில் கொஞ்சம் அலட்சியமாக இருப்போம். பொரித்த உணவுகள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அது உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், எண்ணெய் காரணமாக, உங்கள் சருமத்தில் முகப்பருவும் வரலாம்.