Whatsapp Update: இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!
பழைய மாடல் போன்களை இன்னும் பயன்படுத்தி வருபவர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதன்படி சில மாடல் ஐபோன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் iPhone 5s, iPhone 6 மற்றும் iPhone 6 Plus போன்ற மொபைல்களில் இனி வேலை செய்யாது என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த போன்களை பயன்படுபவர்கள் அப்டேட் செய்ய வேண்டும்.
வரும் மே 5, 2025 முதல் iOS 15.1க்கு முந்தைய மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. இது வாட்ஸ்அப் மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
iPhone 5s, iPhone 6 மற்றும் iPhone 6 Plus போன்களில் iOS 12.5.7க்கு பிறகு அப்டேட்கள் வருவதில்லை. இந்த மாடல்கள் வெளியாகி கிட்டத்ட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இது தவிர வேறு iPhone மாடல்களை கொண்ட பயனர்கள் 15.1க்குக் குறைவான iOS பதிப்பை கொண்டிருந்தாலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
இருப்பினும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்கள் வழக்கம் போல தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்.