குலை நடுங்க வைக்கும் பூமியின் முக்கிய இடங்கள் !

Tue, 05 Nov 2024-4:59 pm,

பிரேசில் அட்லாண்டிக் பெருங்கடலில்  உள்ள ஒரு தீவு இது. இத்தீவில் கொடிய வகை பாம்புகள் உள்ளது. இந்த இடத்தின் சதுர அடி பரப்பளவு மிகக் குறைவு. ஆனால் இங்கு மக்கள் வசிப்பதுப் பாதுகாப்பானது அல்ல. இந்த இடத்தில் கொடிய பாம்புகள் ஒன்றான கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர் உள்ளது. அதிக உயிர் சேதங்கள் ஏற்படக் காரணம் இந்தக் கொடிய வகைப் பாம்புகள். இந்த பாம்பை ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு என்று கூறப்படுகின்றனர்.

பூமியில் மிகவும் வெப்பமான வறட்சியான இடம் இது. இந்த இடம் வடகிழக்கில் உள்ள எத்தியோப்பியாவில் தெற்கு எரித்திரியா மற்றும் வடமேற்கு ஜிபூட்டிக்கு இடையே அமைந்துள்ள டானாகில் பாலைவனம், இப்பகுதியை சூழ்ந்த மிக நச்சு வாய்ந்த வாயுக்கள் மற்றும் எரிமலைகளால் சூழப்பட்ட ஆபத்தானப் பகுதி என்றுக் கூறப்படுகிறது.

வட ஆபிரிக்காவில் உள்ள சஹேல் பகுதியில் அமைந்துள்ள வறண்ட காலநிலையை எப்போதும் கொண்டுள்ளப் பகுதி. இங்கு உயிர் வாழ்வது மிகக் கடினம். அதுமட்டுமல்லாமல் குறைந்தக் காலம் இருப்பதே மிகவும் சிரமம். 1972 மற்றும் 1984 ஆண்டில் மிக கடுமையான வறட்சியால் கிட்டத்தட்ட 1,00,000க்கும் மேல் மக்கள் இறந்துள்ளனர். இங்குக் காணப்படும் இயற்கை சூழல் மக்களை வாழவிடாது, பூமியில் மிகவும் ஆபத்தான இடங்களில் இதுவும் ஒன்று எனக் கூறுகின்றனர்.

பூமியில் கடும் குளிர்மிகுந்த இடம் இது. இங்குள்ள சைபீரியாவில் உள்ள தொலைத்தூரத்தில் அமைந்துள்ள கிராமம். அங்குக் கடுமையான குளிர் மக்களை வாழவிடாமல் சாவடித்துவிடும் நிலைக்கு தள்ளப்படும். ஆண்டு முழுவதும் குளிர்மிகுந்து காணப்படுவதால் விவசாயம் உள்ளிட்ட உணவிற்கு தேவையானதைக்கூடத் தயாரிக்க முடியாத நிலையில் மக்கள் இறந்துவிடுவார்கள். இந்த இடத்தை மிகவும் ஆபத்தான பகுதியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

அலகோவாஸ், வடகிழக்கு பிரேசிலில் உள்ளது. இங்கு அதிக மழைப்பொழிவு, பேரழிவு, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்றவை அதிகமாக நிகழும் ஆபத்தானப் பகுதி. இங்கு எப்போதும் ஈரமான பருவ நிலையை கொண்டுள்ளது எனவே மழைக்காலங்களில் இங்கு வாழ்வது மிகக் கடினம் என்றுக் கூறுகின்றனர்.

மன்ரோவியா, லைபீரியாவின் தலைநகரம் இது. இங்கு அட்லாண்டிக் கடற்கரையை நகரின் இருப்பிடம் முழுவதும் புயலால் தாக்கப்படுகிறது. வெள்ளம், புயல் மற்றும் அதிக மழைப்பொழிவு மக்களை வாழவிடாமல் செய்கிறது என்றும் இதனை ஆபத்தான இடமாகத் தேர்வு செய்துள்ளனர்.

 

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையான சினாபங் மலைகள் இங்கு அடிக்கடி திடீரென்று வெடிக்கும். இது சமூகத்திற்கும் அங்கு சுற்றியுள்ள மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.  இந்த எரிமலை வெடிப்பால் ஏராளமான குடும்பத்தார்கள் வேளியேற்றப்பட்டனர். இந்தோனேஷியாவில் சினாபங் மலையைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளபடுகின்றனர் என்றுக் கூறப்படுகிறது.

நமீபியாவில் உள்ள எலும்புக்கூடு கடற்கரை என அழைக்கப்படுகிறது. இங்கு  பாழடைந்த கடற்கரை மற்றும் பனிமூட்டம் வலுவான நீரோட்டங்கள் கப்பல்களுக்கு விபத்துக்கு வழிவகுக்கிறது.  இங்கு சிங்கக்க்கூட்டங்கள், ஹைனாக்கள் போன்ற உயிரைப்பறிக்கக் கூடிய விலங்குகள் சுற்றித்திருகின்றது. மிகக்கடுமையான இயற்கை காலநிலை மற்றும் வெப்பம் அதுமட்டுமில்லாமல் குறைந்த நன்னீர் ஆதாரங்கள் மனித வாழ்க்கையை மோசமாக்குகிறது. இந்த இடத்தை பூமியில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக பங்களிக்கிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link