வாழைப்பழத் தோலில் பதுங்கியுள்ளன ஏராளமான நன்மைகள்: அறிந்து பயன் பெறுவோம்
வாழைப்பழத் தோலை உங்கள் சருமத்தில் தேய்த்துக்கொண்டால் சருமம் பிரகாசமாகும். மேலும் வாழைப்பழத்தோல் சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் குறைக்கும். சோரியாசிஸ் அதாவது தடுப்புத் தோல் பிரச்சனை உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது ஈரப்பதத்தை அளித்து நமைச்சலையும் தடுப்புத் தன்மையையும் நீக்கும். முகப்பரு வடுக்கள் மீது வாழைப்பழத் தோலை தேய்த்தால் வடுக்கள் நீங்கும், சருமம் மிருதுவாகும். மருவை அகற்ற, ஒரு பழுத்த வாழைப்பழத் தோலை அதன் மேல் வைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விட வேண்டும்
கண் வீக்கம் அல்லது வலி இருந்தால், கண்களை மூடி, அதன் மேல் வாழைப்பழத் தோலை வைத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத் தோலில் உள்ள விசேஷ பண்புகள், கண்களுக்கு பல நன்மைகளை தர வல்லவை. தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்கு கம்பியூட்டரில் பணி புரிபவர்கள் இரவு தூங்கும் முன் கண்களை மூடிக்கொண்டு வாழைப்பழத் தோலை கண்களில் வைத்தால், கண்களில் ஏற்பட்டுள்ள சோர்வு நீங்கும்.
சருமத்தில் நீரோட்டத்தை அதிகரிக்க வாழைப்பழத் தோல் மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. வாழைப்பழத்தோலில் அதிக பீனாலிக்ஸ் இருக்கின்றன என்றும் இவற்றில் அதிக ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆண்டியாக்சிடெண்ட் பண்புகள் உள்ளதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்றும் 2018 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத் தோலில் கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பல பயோஆக்டிவ் கலவைகள் உள்ளன. இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.
வாழைப்பழத்தை கூந்தலுக்கான ஒரு மாஸ்காக பயன்படுத்தலாம் என கூந்தல் ஆரோக்கிய நிபுணர்கள் கருதுகிறார்கள். இது கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது.
பற்களை வெண்மையாக்குவதற்கு வாழைப்பழத் தோல் உதவுகிறது: 2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி, வாழை தோல்கள் ஆக்டினோமைசெட்டெம்கிமிட்டன்ஸ் மற்றும் ஜிங்கிவாலிஸுக்கு எதிராக பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த பாக்டீரியாக்கள் ஈறு வீக்கம் மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற பீரியண்டால்ட் நோய்களுக்கு வழிவகுக்கின்றன். வாழைப்பழத் தோலை பற்களில் தேய்ப்பது பற்களை வெண்மையாக்குவதோடு ஈறுகளையும் வலுப்படுத்துகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.