காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி ஊற வைத்த வேர்க்கடலை... வியக்க வைக்கும் மாற்றங்கள்
வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் பாதாமிற்கு இணையான சத்துக்கள் உள்ளன. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஆரோக்கிய கொழுப்புகள், பொட்டாசியம், வைட்டமின் பி, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.
ஊறவைத்த வேர்க்கடலை: பலருக்கு வறுத்த வேர்க்கடலை சாப்பிட பிடிக்கும். மசாலா சேர்த்து பொரித்த வேர்கடலையை பிடிக்காதாவர் இருக்க முடியாது. ஆனால் ஊற வைத்தவேர்க்கடலை சாப்பிட்டிருக்கிறீர்களா? ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால், அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலில் எளிதில் உறிஞ்சப்படுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
ஆற்றல்: வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் நாள் முழுவதும், உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும். எனவே நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருக்கும்.
வேர்க்கடலையில் உள்ள மோனோ சாச்சுரேட்டட், பாலி அண்சாசுரேடட் கொழுப்புகள், கெட்ட கொழுப்பை எரித்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குடல் ஆரோக்கியம்: ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். இதனால், மலச்சிக்கல் மற்றும் வாயுவில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை எளிதில் சுத்தப்படுத்த உதவுகிறது.
உடல் பருமன்: வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், ஒரு கையளவு வேர்க்கடலை சாப்பிட்டால் போதும், உங்கள் பசி அடங்கி வயிறு நிறைவாகஇருக்கும். இதனால் உடல் பருமன் குறையும்.
தசை வளர்ச்சி: வேர்க்கடலை தாவரப் புரதங்கள் நிரம்பிய உணவு என்பதால், தசை வளர்ச்சிக்கும் மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. தசை பலவீனம் கொண்டவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிடலாம்.
எலும்பு ஆரோக்கியம்: வேர்க்கடலையில் ஆன்டிஆக்ஸிடன்ட் ரெஸ்வெராட்ரோல் உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். இதனால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
முதுமை எதிர்ப்பு பண்புகள்: வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற பயோஆக்டிவ் சேர்மங்கள் வயதான எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இது செல் செயல்பாட்டை மேம்படுத்தி, இளமையை காக்க உதவுகிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.