Amla Benefits : உடல் எடை குறைப்பு to சரும பளபளப்பு-நெல்லிக்காயின் பயன்கள்!
நெல்லிக்காய் சாப்பிடுவதனால் உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மை ஏற்படும் என்பது பலருக்கு தெரியும். அதில், குறிப்பாக இருக்கும் சில நலன்கள் குறித்து இங்கு பார்கலாமா?
உடல் எடை குறைப்பு:
நெல்லிக்காயில் ஃபைபர் சத்துகள் அதிகமாக இருக்கின்றன். இதனால், இதை சாப்பிட்டவுடன் நமக்கு வயிறு முழுமையான உணர்வு கிடைத்துவிடும். இதனால் அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் இருந்தும் நாம் தப்பிக்கலாம். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.
வைட்டமின் சி:
வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்று, நெல்லிக்காய். இதனால் உடலில் காலிஜன் உற்பத்தி அதிகரித்து முக்கியமான உடல் பாகங்களுக்கு நன்மை பயக்கிறது.
சரும பராமரிப்பு:
நெல்லிக்காயில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், சருமத்தில் சுருக்கம் வருவதையும், சீக்கிரமே வயதானது போன்ற தோற்றம் ஏற்படுத்துவதையும் தவிர்க்கிறது. இதனால் சருமம் ஆரோக்கியமாக இருப்பதுடன் பளபளப்பாகவும் மாறுகிறது.
இதயத்திற்கு நல்லது:
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருட்களுள் ஒன்று, நெல்லிக்காய். இது, உடலில் கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொழுப்பை சேர விடாமல் தடுக்கிறது. இதனால், ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்திற்கு நன்மை பயக்கிறது.
செரிமானம்:
வயிற்றுக்கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது நெல்லிக்காய். மலச்சிக்கல் பாதிப்பையும் நெல்லிக்காய் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, குடல் ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு சக்தி:
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உடலில் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், உடல் நோய் கிருமிகளை எதிர்த்து போராட தயாராகிறது.
ரத்த சர்க்கரை அளவு:
நெல்லிக்காயில் குரோமியம் சக்தி உள்ளது, இது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை பேலன்ஸ் செய்ய உதவுகிறது. மேலும் இன்சுலின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நீரிழிவு அபாயத்தையும் குறைக்கிறது.