அசத்தும் செர்ரி பழம்: ஒரே பழத்தில் இத்தனை நன்மைகளா!!

Sat, 12 Nov 2022-5:01 pm,

செர்ரி பழங்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடெண்ட் கலவைகள் நிறைந்துள்ளன. அவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 

செர்ரிகளில் பொட்டாசியம் மற்றும் பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள. அவை அவற்றின் சக்திவாய்ந்த இதயப் பாதுகாப்பு குணங்களுக்கு நன்கு அறியப்பட்டவை. ஆகையால் செர்ரி பழங்களை உட்கொள்வது இதயத்துக்கு மிக நல்லது. 

செர்ரிகளில் மெலடோனின் மற்றும் அழற்சி எதிர்ப்பு இரசாயனங்கள் உள்ளன. இதன் காரணமாக இது நல்ல உறக்கத்துகு உதவுகின்றது, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் செர்ரி பழங்களை சாப்பிடலாம்

செர்ரிகள், குறிப்பாக புளிப்பு செர்ரி சாறு மற்றும் தூள், விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட உதவுவதோடு, உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி மற்றும் தசை சேதத்தை குறைக்கும். சாதாரண மக்களும் ஜிம்மில் உடற்பெயர்ச்சி செய்த பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி புத்துணர்சி பெற இது உதவும்.

 

செர்ரிகளில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் உங்கள் உடல் சிறப்பாக செயல்படத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மை கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link