Health Tips: அரிசி உணவில் இத்தனை நன்மைகளா..!!
அரிசி ஒரு பிரோபயாட்டிக் தானிய உணவு. அரிசி உணவுகள் செரிமானத்திற்கு வலுசேர்ப்பதோடு, வயிற்று பிரச்சனைகளின் போது சாப்பிட சிறந்த உணவாக கருதப்படுகிறது
அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது. எனவே இது பசி உணர்வை கட்டுப்படுக்கிறது என்பதால் உடல் எடையை குறைப்பதிலும் உதவுகிறது
தென்னிந்தியர்களான நமக்கு எவ்வளவு விதவிதமாக மற்ற நாட்டு, பிராந்திய வகை உணவுகளை சாப்பிட்டாலும், கைப்பிடியளவாவது சாதம் சாப்பிட்டால் மட்டும் தான் திருப்தி ஏற்படுவதாக, பலரும் கூறி வருகின்றனர்.
அரிசியை எல்லா விதமான பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.
அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன என்று பிரபலங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணராக மற்றும் ஆலோசகராக இருக்கும் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.