மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
Health Benefits of Turmeric: மஞ்சளின் மகிமை நம்மில் பலருக்கு முழுமையாக தெரிவதில்லை. புற்றுநோய் முதல் சாதாரண தொண்டைப்புண் வரையில், மருந்தாக மஞ்சள் கொடுக்கும் நிவாரணம் கணக்கில் அடங்காதவை.
வலி நிவாரணி: உடலில் ஏற்படும் வலி, வீக்கம் ஆகியவற்றை குறைக்க மஞ்சளை அரைத்து பற்றாக போடும் பழக்கம் உள்ளது. அதோடு புண்களை ஆற்றும் சக்தியும் மஞ்சளுக்கு உண்டு.
மூளை ஆரோக்கியம்: மஞ்சளுக்கு அல்ஸைமர் என்னும் ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சரும ஆரோக்கியம்: மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. வலிகள் வீக்கம் ஆகியவற்றை நீக்கும் திறன் பெற்றது. நம் சருமத்தில் உள்ள கிருமிகளை அகற்றி சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கிறது
இதய ஆரோக்கியம்: மஞ்சள் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை உடைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கலாம்.
கல்லீரல் ஆரோக்கியம்: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி கல்லீரலை உள்ளிருந்து பலப்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தம்: பிபி என்னும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற அபாயம் பெருமளவு குறையும்.
சூரிய சக்தி: மஞ்சள் நிறம் சூரிய சக்தியை பிரதிபலிப்பதாக வேதங்கள் கூறுகின்றன. சூரிய மண்டலத்தின் காலச்சக்கரம் காரணமாகத்தான் பருவங்கள் மாறுபட்டு, இந்த உலகில் பயிர்கள் தளைத்து உயிர்கள் இந்த மண்ணில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.