Health Tips: வியக்க வைக்கும் தேங்காய்... பல நோய்களுக்கு அருமருந்து!
தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தேங்காயில் அதிக நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது.
தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஏனென்றால், தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
தேங்காய் ஒரு சிறந்த ஆண்டிபயாடிக். இது உங்களை அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும், அதாவது அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)