ஒரே வாரத்தில் முகம் வேற லெவலில் ஜொலிக்க சூப்பரான 5 டிப்ஸ்
தக்காளி தழும்புகளை நீக்கி, நிறத்தை அழகாக மாற்றும். இதில் அதிக அளவில் வைட்டமின்கள் உள்ளன. அவை தழும்புகளை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்கும். தக்காளி மூலம் முகப்பொலிவைப் பெற ஒரு தேக்கரண்டி தக்காளி சாறு எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் அதை உங்கள் முகம் முழுவதும் தடவவும். 15 நிமிடம் விட்டு பின் முகத்தை கழுவவும்.
எலுமிச்சை ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். தோல் நிபுணர்களின் கூற்றுப்படி, எலுமிச்சை உங்கள் நிறத்தை ஒளிரச் செய்வதற்கும் ஆழமாக சுத்தப்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். இது கறைகளை நீக்கி உங்கள் சருமத்தை களங்கமற்றதாக மாற்றும். எலுமிச்சம் பழச்சாற்றை கள்ள மாவு அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவி வந்தால், சில நாட்களில் நல்ல வித்தியாசம் தெரியும்.
பல நூற்றாண்டுகளாக மஞ்சள் இயற்கையாகவே அழகை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். மஞ்சளை பச்சைப் பாலில் கலந்து முகத்தில் தடவி வர, சில நாட்களில் முகம் பளபளக்கும்.
கடலை மாவு ஒரு இயற்கையான மற்றும் பயனுள்ள ஃபேஸ் பேக்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்தின் வகைக்கு ஏற்ப, அதில் பால் அல்லது தயிர் கலந்து, சிறிது மஞ்சள் கலந்து பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால், இதில் எலுமிச்சை அல்லது தக்காளி சாறு சேர்க்கலாம். இதனை முகத்தில் தடவினால் தழும்புகள் மறைந்து பொலிவு திரும்பும்.
அரிசி மாவில் பாரா அமினோ பென்சாயிக் அமிலம் உள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதோடு வைட்டமின் சி உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இந்த பேக் செய்ய, இரண்டு தேக்கரண்டி அரிசி மாவுடன் மூன்று தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி, முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும். இதனை முகம் முழுவதும் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் முகத்தை கழுவ வேண்டும்.