இந்த மாதம் அறிமுகம் ஆகவுள்ள அட்டகாச ஸ்மார்ட்போன்கள் இவைதான்!!
![Oppo Reno7 தொடர் Oppo Reno7 Series](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/02/03/210705-mobile1.jpg?im=FitAndFill=(500,286))
Oppo தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரை பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. Oppo Reno7 மற்றும் Oppo Reno7 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தத் தொடரில் சேர்க்கப்படும்.
![Samsung Galaxy S22 தொடர் Samsung Galaxy S22 Series](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/02/03/210704-mobil2.jpg?im=FitAndFill=(500,286))
சாம்சங் பிப்ரவரி 9 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. அதில் இந்தத் தொடரின் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும். இந்தத் தொடரில் மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் இருக்கும். Samsung Galaxy S22, Samsung Galaxy S22 + மற்றும் Samsung Galaxy S22 Ultra ஆகியவை இவை.
![ரியல்மி 9 ப்ரோ தொடர் Realme 9 Pro Series](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/02/03/210703-mobil3.jpg?im=FitAndFill=(500,286))
சீன ஸ்மார்ட்போன் பிராண்டான Realme அதன் புதிய 5G ஸ்மார்ட்போன் தொடரான Realme 9 Pro தொடரையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் தொடரில் ரியல்மி 9 ப்ரோ + மற்றும் ரியல்மி 9 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
Vivo தனது புதிய 5G ஸ்மார்ட்போனை பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, வலுவான டிஸ்ப்ளே மற்றும் பல அற்புதமான அம்சங்களுடன் வரும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரான ரெட்மி நோட் 11 சீரிஸை பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதில் ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 எஸ் ஆகியவை அடங்கும்.