வெற்றிகள் குவியும்: சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகள் வாழ்வில் உச்சம் தொடுவார்கள்

Thu, 14 Sep 2023-4:16 pm,

சனி பகவான்: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகடும் கிரகமாகவும் மிக முக்கியமான கிரகமாகவும் உள்ளார். இவரது அனைத்து வித மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சனி வக்ர நிவர்த்தி: நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக உள்ளார். மேலும் துலா ராசியில் அவர் உச்சம் பெற்றுள்ளார். 

 

ராசிகளில் தாக்கம்: சனியின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். 

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சனி வக்ர நிவர்த்தி மிகவும் சாதகமானதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பொருளாதார முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இருக்கும். சனி வக்ர நிவர்த்தி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அற்புதமான மற்றும் அதிர்ஷ்ட காலங்களைக் கொண்டு வரும். நவம்பர் 4க்கு பிறகு சிறிதளவு கடின உழைப்பால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண ஆதாயங்கள் சாத்தியமாகும், இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். உங்களுக்கு ஏதேனும் சட்ட தகராறு இருந்தால் அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். 

 

துலாம்: சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களின் தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் பணி வாழ்க்கையின் பல அம்சங்களில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வேலையில் சிரமப்படுபவர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி பலன் அளிக்கும். சனி உங்கள் ஜாதகத்தின் செல்வ வீட்டில் சஞ்சரிப்பார். இந்த மாற்றம் திடீர் நிதி ஆதாயங்களைக் கொண்டு வரலாம். சனியின் வக்ர நிவர்த்தியால் முன்னோர்களின் சொத்துக்களும் கூடும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

சனி பகவானை மகிழ்விக்க: சனி பகவானை மகிழ்விக்க சனி சாலிசா மற்றும் ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கு உதவும் நபர்கள் மீதும் சனி பகவான் பரிபூரணமான அருளை பொழிவார்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைன்யுள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link