Vodafone Idea மிக சிறந்த ரீச்சார்ஜ் திட்டம், முழு விவரம் இதோ

Thu, 28 Oct 2021-9:51 am,

Vodafone Idea இன் ரூ 1197 திட்டம்: நிறுவனத்தின் இந்த திட்டமானது தினமும் 1.5 ஜிபி டேட்டாவை 180 நாட்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் மொத்த டேட்டா 270 ஜிபி ஆகிவிடும். திட்டத்தில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. வோடபோன்-ஐடியா திட்டங்களிலும் OTT நன்மைகள் கிடைக்கின்றன.

Vi Movies & TV Classicக்கான இலவச அணுகல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் Binge All Night ஆகியவற்றின் பலன் கிடைக்கும். Binge All Night மூலம், தினமும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.

Jio இன் ரூ.1299 திட்டம்: ஜியோ ரூ.1299 திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, ஆனால் அதில் 24 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இது ஜியோ பயன்பாடுகளுக்கு (JioTV, JioCinema, JioSecurity, JioCloud) இலவச சந்தாவுடன் வரம்பற்ற அழைப்பு மற்றும் 1000 SMS ஆகியவற்றை வழங்குகிறது.

Airtel இன் ரூ 1498 திட்டம்: ஏர்டெல்லின் இந்த திட்டம் ஜியோவைப் போன்ற அம்சங்களில் உள்ளது. இதில், மொத்தம் 24 ஜிபி டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டம் Wynk Music, இலவச HelloTunes, பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, வரம்பற்ற அழைப்பு மற்றும் 3600 SMS ஆகியவையை வழங்குகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link