இந்த 3 ராசிக்காரங்க தயாரா இருங்க: வக்ர சனி உங்களுக்கு அள்ளிக்கொடுக்கும்.. ஓஹோன்னு இருப்பீங்க

Fri, 26 May 2023-5:45 pm,

சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் 17, 2023 அன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சனியின் வக்ர பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்பட்கின்றது.

 

கேந்திர திரிகோண ராஜயோகம்: சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருகாக உள்ளது. இது மிகவும் சுபமான யோகமாக கருதப்படுகின்றது. சனியின் வக்ர பெயர்ச்சி சற்று எதிர்மறையான பலன்களை அளிக்கும் என்றாலும் இந்த யோகத்தால் அது ஈடு செய்யப்படும் என்று ஜோதிடர்கள் கருதுகிறார்கள்.

ராசிகளில் தாக்கம்: சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 3 ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் நல்ல செய்திகளைத் தரும். இந்த காலத்தின் இந்த ராசிக்காரர்களின் பல விருப்பங்கள் நிறைவேறும். அரசு வேலை எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பெறலாம். இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் துறையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மகிழ்ச்சி மழை பொழிய வைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோக பலன் கிடைக்காது என்றாலும் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி வலுவாக இருப்பதால் இவர்களுக்கு பண பலன்கள் அதிகம் கிடைக்கும். இது புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும். முதலீடு செய்ய நல்ல நேரம், லாபம் கிடைக்கும்.

துலாம்: வக்ர சனியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் துலாம் ராசியினருக்கு நன்மை பயக்கும். இந்தக் காலத்தில் வீடு வாங்கும் கனவு நனவாகும். தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் இருந்த பல பிரச்சனைகள் விலங்கும். 

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link