அடிச்சித்தூக்கு “அமரன்” பட ஹீரோ சிவகார்த்திகேயனின் 100கோடி வசூல் செய்த படங்கள் !
‘அமரன்’ இத்திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எடுக்கப்பட்ட உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. முகுந்த் வரதராஜனின் தோற்றத்தில் சிவக்கார்த்தியும் மற்றும் அவரது மனைவி இந்து ரெபேகா தோற்றத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
அடுத்ததாக சாய் பல்லவி மற்றும் சிவக்கார்த்திகேயன் இருவரும் இணைந்து நடித்த படம் ‘அமரன்’ இப்படம் பிரபல ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் காஷ்மீரில் நடந்தப் போராட்ட போரினைப் பற்றி எடுத்துரைக்கிறது. இப்படம் உலகளவில் மூன்று நாளிலே ரூ.100 வசூல் செய்துவிட்டது.
சிவக்கார்த்திகேயனுக்கு எந்த நடிகையாக இருந்தாலும் பொருத்தமாகிவிடும். அந்தவகையில் பக்கா ஜோடியாக சிவக்கார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் பொருத்தமானர்.
அடுத்ததாக ‘டான்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு மே 13 அன்று உலகளவில் வெளியானது. மீண்டும் சிவக்கார்த்திகேயன் பிரியங்கா மோகனுடன் இணைந்து நடித்த படம் ‘டான்’ இது சிவக்கார்த்திகேயனுக்கும் பிரியங்கா மோகனுக்கும் ஜோடியை மேட்ச் செய்தது.
டாக்டர் திரைப்படம் குழந்தைகளைப் பெற்றோர்கள் எந்தவிதத்தில் பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் மற்றவர்களை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட சிறப்புமிக்கப் படம்.
டாக்டர் திரைப்படம் அறிமுக நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினியாக சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படம் முழுவதும் காமெடி கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படம். இதனை பலரும் இரு முறைக்கு மேல் திரையரங்களில் குடும்பமாகப் பார்த்து வந்தனர்.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. எதிர்ப்பார்ப்பைவிட அதிக வசூலை அள்ளிகுவித்தது.
சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரூ.100 கோடி வசூல் அளித்த இந்த படங்கள் தூள்பறக்கும் வசூல்வேட்டையாக சிவக்கார்த்திகேயனுக்கு அமைந்துவிட்டது.