மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!
திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதியத் தரவுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 14.41 லட்சம் நிகர உறுப்பினர்களாக இருந்ததைக் காட்டுகிறது,நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை பிரதிபலிக்கும் தரவுகள் இது என்பது என்று சொல்லல
பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2.90 லட்சமாக இருந்தது. பெண் உறுப்பினர்களின் அதிகரிப்பானது, உள்ளடக்கிய மற்றும் பலதரப்பட்ட பணியாளர்களை நோக்கிய பரந்த மாற்றத்தைக் குறிக்கிறது
ஏறக்குறைய 11.80 லட்சம் உறுப்பினர்கள், EPFO-ல் இருந்து வெளியேறி, பின்னர் மீண்டும் இணைந்துள்ளனர் என்பதை பே-ரோல் தரவு சுட்டிக்காட்டுகிறது
வெளியேறியர்வர்களில் பலர் வேலையை மாற்றிக் கொண்டு, மீண்டும் வருங்கால ஊழியர் வைப்புநிதியத்தில் இணைந்துள்ளனர்
ஒழுங்கமைக்கப்பட்ட பணியாளர்களில் சேரும் நபர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள், முதன்மையாக முதல் முறையாக வேலை தேடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 18-25 வயதுக்குட்பட்டோர் 56.83 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது
மார்ச் மாதத்தில் வேலைக்கு சேர்ந்த14.41 லட்சம் பேரில், 43 சதவீதம் நடுத்தர வயதினர் ஆவர்.
உற்பத்தி, சந்தைப்படுத்தல் சேவைகள், கணினிகளின் பயன்பாடு, உணவகங்கள், பட்டயப்படிப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் அசைவ உணவுப் பாதுகாப்பு, பீடி தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன
வேலையில் இருந்து மாறியவர்கள், மீண்டும் பணியாளர் ஓய்வூதிய அமைப்பில் இணைந்தபோது, நீண்ட கால நிதி நலனைப் பாதுகாத்து, தங்களின் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, தங்கள் திட்டமிடலை மாற்றத் தேர்வு செய்துள்ளனர்
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை