என்றென்றும் தீரா மர்மங்களை கொண்ட ரகசிய பிரமிடுகள்! எகிப்தின் பிரம்மாண்டமான கிசா பிரமிடு!
மன்னரின் மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இருக்கும் என்றும், அதற்காக அவரின் பயன்பாட்டிற்கான பொருட்களை சேகரித்து வைத்த எகிப்து அரசாங்கம், அதற்காக மாபெரும் கட்டடமாக கட்டியது பிரமிடு...
இந்த பிரமிடுகள் கட்டப்பட்டது எப்போது? கி.மு. 2580இல் தொடங்கிய கட்டுமானம் 20 ஆண்டுகள் நீடித்தது என்றால், தற்போது கிசா பிரமீடு கட்டி எத்தனை ஆண்டுகள் ஆனது என கணக்கிட்டுப்பாருங்கள்
3200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடு உலகின் மிகவும் பிரம்மாண்டமான பிரமிடு ஆகும்
இந்த பிரமிடுகளில் மன்னர் பயன்படுத்தக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவை காலப்போக்கில் கொள்ளையடிக்கப்பட்டன
கிசா பிரமிடுக்கு அருகே இருக்கும் இரு பிரமிடுகளையும் குஃபு மன்னரின் வழித்தோன்றல்கள் கட்டினார்கள்
கொளுத்தும் வெயில் வெளியில் இருந்தாலும், பிரமிடுக்குள் இருக்கும் வெப்பம் 20 டிகிரி தான் என்பது மிகவும் ஆச்சரியமான தொன்மை வாய்ந்த கட்டடக்கலை என்று பாராட்டப்படுகிறது
எகிப்து நாட்டில் நைல் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது கிசா பிரமிடு
இஸ்ரேல் மலைகளில் இருந்து பார்த்தாலும், சந்திரனில் இருந்து பார்த்தாலும் கிசாவின் பிரமிடுகள் தெரியும் என்று கூறப்படுகிறது.