இரத்த சோகை பிரச்சனை உங்களுக்கு இருக்கா? அறிகுறிகள், காரணங்கள் இதோ
உடலில் ரத்தத்தின் அளவு குறைவதால், உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும். பெரும்பாலும் சோர்வு, பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் குறைந்த ஹீமோகுளோபினின் அறிகுறிகளாகும்.
தினசரி உணவில் இரும்புச்சத்து குறைந்தால் ஹீமோகுளோபின் குறையும். பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் போது உடலில் ஹீமோகுளோபின் அளவும் குறையும். மாதவிடாய் (Periods) காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதாலும் ஹீமோகுளோபின் குறையலாம்.
மிகவும் சோர்வாக உணர்வது, தோல் மஞ்சள் நிறமாக இருப்பது, பலவீனமாக இருப்பது, இதயத்துடிப்பு வேகமாக இருக்கும் பிரச்னை, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் காணப்படலாம்.
உங்களுக்கும் ஹீமோகுளோபின் குறைபாடு பிரச்சனை இருந்தால், தினசரி உணவில் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளின் அளவை அதிகரிக்கவும். இறைச்சி, மீன், சோயாபீன்ஸ், முட்டை, உலர் பழங்கள், ப்ரோக்கோலி, பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பீட்ரூட், கேரட் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் வைட்டமின் சி குறைபாட்டைப் போக்க திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், கிவி போன்ற பழங்களைச் சாப்பிடுங்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சப்ளிமெண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.