மலையாள படத்திற்கு இசை அமைக்கும் அனிருத்! யார் படம் தெரியுமா?
)
3 படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர், அனிருத். இவர், கடந்த 11 ஆண்டுகளில் அபரிபிதமான வளர்ச்சி பெற்ற இசையமைப்பாளராக உள்ளார்.
)
சமீபத்தில் வெளியான ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, இவர் பான் இந்திய அளவில் அதிகம் தேடப்படும் பிரபலமான மாறினார்.
)
அனிருத்தின் இசையில் கடந்த ஆண்டு வெளியான அனைத்து பாடல்களும், படங்களுமே ஹிட் அடித்தன. இவர், அடுத்தடுத்து பல பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அனிருத், படங்களுக்கு இசையமைப்பது மட்டுமன்றி அவ்வப்போத் இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.
அனிருத், தற்போது தனது இசை கச்சேரி பயணத்தை தொடங்க இருக்கிறார். இந்த பயணத்தின் முதல் நகரமே துபாய்தான் என அவர் அறிவித்துள்ளார்.
அனிருத், தனது இசைப்பயணம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது தான் ஒரு மலையாள படத்திற்கு முதல் முறையாக இசையமைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.
இவர், மலையாளத்தில் பெரிய நட்சத்திரம் ஒருவரின் படத்திற்கு இசையமைத்திருப்பதாக கூறப்படுகிறது.