பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..
பதற்றத்தை கட்டுப்படுத்தவும், மனதை சாந்தப்படுத்தவும் சில விஷயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
மூச்சுப்பயிற்சி:
மூச்சுப்பயிற்சி செய்வது, உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும். மார்பு மீது குறுக்காக கை வைத்து, மூச்சு விட வேண்டும். அப்படி செய்யும் போது, உங்கள் கண்களை மூடிக்கொண்டு ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
கற்பனை:
கண்களை மூடி, நீங்கள் பதற்றமற்ற நிலையில் தற்போது இருக்கும் சூழ்நிலையை எப்படி கையாள்வீர்கள் என்று நினைத்து பார்க்க வேண்டும். நீங்கள் தைரியமாக இருக்கும் போது எப்படி இருப்பீர்கள், என்ன செய்வீர்கள் என்பதை நினைவுகூற வேண்டும்.
இசை கேட்பது:
உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது சாந்தப்படுத்தும் இசை அல்லது பாடலை கேட்கவும். இது உங்களது மனநிலையை சற்று தூக்கி விடும்.
பாசிடிவாக யோசிக்க வேண்டும்:
நாம் நம்மை பற்றி மிகவும் தவறான எண்ணங்களை கொண்டிருந்தாலோ, அல்லது குறைவாக மதிப்பிட்டுக்கொண்டாலோ, அது கண்டிப்பாக நமது மன நிலையையும் தாக்கும். எனவே, நாம் நமக்குள் முதலில் பாசிடிவாக பேசிக்கொள்ள வேண்டும்.
கேள்விகள்:
பதற்றமான சூழ்நிலைகளில், நாம் ஏன் இப்படி உணர்கிறோம் என்பதையும் இதை சரி படுத்த நம் கையில் ஏதேனும் இருக்கிறதா? என்று யோசித்து அப்படி எதுவும் இல்லை எனில் அமைதியாக அந்த சூழ்நிலை கடந்து செல்வது நல்லது.
உடற்பயிற்சி:
உங்களை சாந்தப்படுத்தும் எந்த உடற்பயிற்சியையும் நீங்கள் செய்யலாம். குறிப்பாக, ஒரு சிலருக்கு stretches செய்தால், மனது சாந்தம் அடைந்த உணர்வு வரும். எனவே, கைகளையும் கால்களையும் நீட்டி மடக்கி உடற்பயிற்சி செய்யலாம்.