Chandrababu Naidu : ஆந்திராவின் புதிய முதல்வர் சந்திரபாபு நாயுடு! அறிந்ததும் அறியாததும்..
சந்திர பாபு நாயுடு, 1950ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள நாரவாரிபல்லே எனும் இடத்தில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
1970ஆம் ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்த இவர், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தார். தற்போது, இந்திய அளவில் பெரிய அரசியல் கட்சி பிரபலங்களுள் ஒருவராகவும் இருக்கிறார்.
இளம் வயதிலேயே எம்எல்ஏ ஆனவர், சந்திரபாபு நாயுடு. அதையும் தாண்டி, 28 வயதிலேயே மந்திரியாகவும் மாறினார். 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆடு வரை 7 முறை எம்எல்ஏவாக பதவி வகித்தார்.
சந்திரபாபு நாயுடு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ராமாராவ்வின் மகளை திருமணம் செய்து கொண்ட இவர், அதன் பிறகு அரசியல் ரீதியாகவும் பிரபலமடைய தொடங்கினார்.
ஆந்திரா, ஹை டெக் சிட்டியாக மாறுவதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர், சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் பல்வேறு இன்ஜினியைங் தொழில் நுட்ப ஆலோசனை கூடங்களை ஆரம்பித்தார்.
ஆந்திராவில், பல்வேறு வெளிநாட்டு வர்த்தகர்கள் பலர் முதலீடு செய்வதற்கு இவர் பெரிய காரணமாக இருந்தார். இதனால் ஆந்திரா தொழில் ரீதியாகவும் வளர்ச்சி பெற்றது.
தற்போது ஆந்திரா-தெலங்கானா பிளவு பட்ட பிறகு, முதன் முறை ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.