நீங்கள் பார்த்திராத.. ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு அழகான திருமண புகைப்படங்கள்!
29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவரை பிரிவதாக அறிவித்த அவரது மனைவி சாயிரா பானு.
ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருமணமாகி பல வருடங்கள் கழித்து, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் உணர்ச்சி மிகுந்த கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டு உள்ளது.
ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகள் இருவரும் தங்கள் வாழ்வில் பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது என்பதை அறிந்துக்கொண்டார்.
இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் அவர்களை இணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா தெரிவித்துள்ளார்.
இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சாய்ரா எதிர்பார்க்கிறார்.
ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்திற்குள் செல்ல இருக்கிறார்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கும், சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அழகான ஜோடி எனக் கொண்டாடப்பட்ட இவர்களின் திருமண வாழ்வு 29 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வருவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார் சாய்ரா பானு.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தம்பதியருக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.