வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஓடிச்சென்று உதவிய அரந்தாங்கி நிஷா!
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மிக்ஜாம் புயலால் பெரும் மழை பெய்தது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
மிக்ஜாம் புயலால் ஒரு நாள் முழுவதும் மழை பெய்தது. இதனால் வேளச்சேரி, பெரும்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் வெள்ளம் வடியாமல் இருந்தது.
அரந்தாங்கி நிஷா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் டெம்போவில் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
அரந்தாங்கி நிஷா முன்னர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தான் சென்று கொண்டிருக்கும் பகுதி மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சரையும் தனது போஸ்டில் டேக் செய்து மக்களுக்கு உதவி செய்யுமாறு கூறியிருந்தார்.
அரந்தாங்கி நிஷா, தான் உதவி செய்த போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அந்த மனசுதான் கடவுள்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.