உடம்புக்கு ரொம்ப முடியலையா... இந்த 6 ஜூஸ் குடித்தால் ஜம்முனு இருக்கும்!
இஞ்சி மஞ்சள் ஜூஸ்: இஞ்சி மற்றும் மஞ்சள் என அலர்ஜி எதிர்ப்பு பொருள்கள் கலந்திருப்பது மட்டுமின்றி இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் பொருள்களும் இருக்கின்றன. எனவே இது அலர்ஜியை தவிர்த்து உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.
அன்னாச்சி ஜூஸ்: இதிலும் அலர்ஜி எதிர்ப்பு நொதி பொருள்கள் அதிகமிருக்கின்றன. இது தொண்டை சளி பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கும். மேலும் மூச்சு பிரச்னையையும் சீராக்கும்.
ஆரஞ்சு ஜூஸ்: இதில் வைட்டமிண் சி அதிகமிருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க முக்கிய கூறாகும். குறிப்பாக, இது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்து, தொற்றுக்கு எதிராக வலுவுடன் போராடும்
தர்பூசணி ஜூஸ்: வெயில் காலத்தில் யாராலும் தவிர்க்கவே முடியாத தர்பூசணி பழத்தின் ஜூஸ், வெறும் நீர்ச்சத்து மட்டுமின்றி உங்களுக்கு வைட்டமிண் ஏ மற்றும் சி ஆகியவற்றை அதிகம் வைத்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்.
பீட்ரூட் ஜூஸ்: இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணு மற்றும் வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவும். இதனால் உங்கள் ரத்த ஓட்டம் சீராகி, நோய் எதிர்ப்பு சக்தியும் பலமடையும்.
கேரட் ஜூஸ்: வைட்டமிண் ஏ இதில் அதிகம் இருக்கிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமின்றி கண்பார்வையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த 6 ஜூஸ்கள குறித்து அனைத்து கருத்துகளும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. உங்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால், இதை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதையும் மனதில் கொள்க. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.