இந்த 7 அறிகுறிகள் இருந்தால்... தனிமையில் தவிக்கிறீர்கள் என அர்த்தம் - கண்டிப்பா படிங்க!
டிவியிலோ அல்லது ஓடிடி மூலம் மொபைலிலோ தொடர்ந்து பல மணிநேரங்கள் திரைப்படம் பார்ப்பதும், வெப் சீரிஸ் பார்ப்பதும் கூட தனிமையில் சிக்கியிருப்பதற்கான அறிகுறிதான்.
தனிமையில் இருக்கும் ஒருவர் தன் நண்பர்கள் வட்டத்தில் தனிமையாக இருக்கும் மற்றொருவருடன் அதிக நேரம் செலவழிப்பார் என கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பது தனிமையில் சிக்கியதற்கான மிக முக்கிய அறிகுறியாகும்.
தனிமையில் இருப்பவர்கள் அடிக்கடி எதாவது பொருள்களை வாங்கிவைத்துக்கொள்வார்கள். தேவையின்றி, எந்த காரணமும் இன்றி பொருள்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
உங்களை யாருமே புரிந்துகொள்ளவில்லை என்ற உணர்வு உங்களுக்கு அதிகம் ஏற்பட்டாலும் தனிமையில் சிக்கியிருப்பதற்கான அறிகுறிதான்.
நீண்ட நேரம் குளிப்பது மற்றும் அடிக்கடி வெந்நீரில் குளிப்பதும் கூட தனிமையில் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
தனிமையில் இருப்போருக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. தனிமை உணர்வு குறித்து உங்களுக்கு சந்தேகம் வந்தால் உடனடியாக மனநல மருத்துவரிடம் தகுந்த ஆலோசனையை பெற வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதி செய்யவில்லை.