இந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்களுக்கு பிரஷர் இருக்கலாம் - உடனே பாருங்க
உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அது கண்களின் ரத்த நாளங்களை பாதிக்கும். இதனால் பார்வை கோளாறு ஏற்படும். சிறிய பார்வை கோளாறு ஏற்பட்டாலும் அதுகுறித்து மருத்துவரை ஆலோசிக்கவும்.
அடிக்கடி தலைவலிப்பதும் உயர் ரத்த அழுத்தம இருப்பதற்கான அமைதியான அறிகுறிகள் ஆகும்.
நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்தாலும் உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரக பிரச்னை ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் இருந்தால் மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் ஒழுகும். சிறிய ரத்த நாளங்களை உயர் ரத்த அழுத்தம் பாதிக்கும்.
இதய துடிப்பு சீராக இல்லை என்றாலும் அதிகமாக இதயம் துடித்தாலும் உயர் ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களாகும். எனவே இதனை கண்டு பதற்றமடையாமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.