ஹார்டிக் பாண்ட்யா & நடாசா ஸ்டான்கோவிக்-ன் அட்டகாசமான புகைப்படம்!!
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் அவரது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரபலங்கள் இருவரும் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பான ஹார்டிக்கின் இன்ஸ்டாகிராம் இடுகையில்: "நடாசாவும் நானும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டோம், அது இன்னும் சிறப்பாக வரவிருக்கிறது. மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய உயிரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.