மேஷத்தில் சந்திரன்... அதிர்ஷ்டத்தில் நனைய உள்ள ‘சில’ ராசிகள்!
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 29 அன்று, சந்திரன் செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் நுழையப் போகிறார். இந்த நன்னாளில் திரிபுஷ்கர யோகம், சித்தி யோகம், வியாதிபத் யோகம், பரணி நட்சத்திரம் ஆகிய நட்சத்திரங்களின் சேர்க்கை நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மிதுனம்: நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சேமிப்பதற்கான சூழ்நிலையும், வாய்ப்புகளும் உண்டாகும். திறமைகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் விலகும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்குத் தெளிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஏற்படும்.
கடகம்: சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதம் விலகும். உத்தியோகத்தில் நல்ல மதிப்பு ஏற்படும். விவசாயப் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.சமயோஜிதமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சாஸ்திரம் தொடர்பான தெளிவு பிறக்கும். எதிலும் பகுத்தறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும்.
மீனம்: எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். அறிவு நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டினை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் கருதுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.