ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார் - ஆஷிஸ் நெஹரா

Wed, 24 Jul 2024-10:04 pm,

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். இதனால் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 உலகக் கோப்பை வரை கேப்டனாக நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கவில்லை என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆஷிஷ் நெஹ்ரா பேசும்போது,  ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாதது எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. கிரிக்கெட் என வரும்போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 

உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக இருந்தார். ஆனால் அதே நேரத்தில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் வந்துள்ளார். ஒவ்வொரு கேப்டனுக்கும், ஒவ்வொரு பயிறசியாளருக்கும் மாறுபட்ட எண்ணங்கள் இருக்கும். இந்த நேரத்தில் கம்பீரின் யோசனை இதை நோக்கி உள்ளது.

அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஹர்திப் பாண்ட்யா குறித்து தெளிவாக தெரிவித்துள்ளனர். இது சிறந்தது என நான் நினைக்கிறேன். அவர் டி20-யுடன் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார். ஆனால் அதில் குறைவாகத்தான் விளையாடி வருகிறார். 

ஒயிட்பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பாண்டியா மிக மிக முக்கியமான வீரர். அவர் அணியில் இருக்கும்போது, 4 வேகபந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள். வித்தியாசமான சமநிலையை அணியில் கொண்டு வருவார். 

சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (Impact Player Rule) விதி கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் ஹர்திக் பாண்டியாவின் பிட்னஸை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என நெஹ்ரா கூறியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link