நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க.. உங்க குணாதிசயத்தை நாங்க சொல்லறோம்.!!

Wed, 26 Jun 2024-6:31 pm,

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கு சூரிய கிரகத்தின் தாக்கம் இருக்கும். இந்த நாளில் பிறந்தவர் புத்திசாலி. இவர்கள் இயல்பில் மிகவும் கோபம் கொண்டவர்கள். இவர்களுக்கு பயணம் செய்ய மிகவும் பிடிக்கும், இதன் காரணமாக அவர்கள் அதிக நேரத்தை பயணத்தில் செலவிடுகிறார்கள்.

 

திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள்.அமைதியான இயல்புடையவர்கள். இவர்கள் இன்பத்திலும் துக்கத்திலும் சமமாக இருப்பார்கள்.  பண பலத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த நாளில் பிறந்தவர்கள் அசமூகத்தின் மதிப்பையும் மரியாதையைப் பெறுவார்கள்.

 

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களின் அதிபதி செவ்வாய். அத்தகையவர்களின் இயல்பு மிகவும் ஆற்றல் மிக்கது. தையரியமான உறுதியான மன நிலையை கொண்டவர்கள். இந்த நாளில் பிறந்தவர்கள் தங்கள் சொன்ன வார்த்தைகளை விட்டு விலகாமல் உறுதியாக இருப்பார்கள்.

 

புதன் கிழமையில் பிறந்தவர்கள் இனிமையான வார்த்தைகளை பேசுபவர்கள். இவர்கள் மிகவும் அறிவாளிகள். இவர்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அதங்கள் சொந்த காலில் நின்று வாழ்க்கையில் சாதனை செய்ய விரும்புபவர்கள். இவர்களுக்கு பணத்துக்கு பஞ்சமில்லை.

வியாழக் கிழமை அன்று பிறந்தவர்கள் திறமையானவர்கள், செல்வந்தர்கள், அறிவுத்திறன் அபரிமிதமாக இருப்பவர்கள். சிறந்த ஆலோசகர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதிலும் வல்லவர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வரம் இருப்பவர்கள்.

வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் அழகானவர்கள் மற்றும் திறமையானவர்கள். பகுத்தறிந்து பார்த்து விஷயங்களை ஆராய்வதில் வல்லவர்கள் மற்றும் ஒழுக்கத்தில் மேம்பட்டவர்கள். இவர்களின் அறிவுத்திறன் மிகவும் கூர்மையானது.

சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தின் தாக்கம் இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையை தங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறார்கள். ஆனால் சில சமயம் கொஞ்சம் கடுமையானவர்கள்.தங்கள் துக்கங்களை எளிதில் தாங்கிக் கொள்கிறார்கள்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link