மாசி மாத அதிர்ஷ்ட ராசிகள்... பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவே இருக்காது!

Wed, 07 Feb 2024-2:01 am,

சூரிய பகவான் கும்ப ராசிக்கு செல்லும் நிலையில், சனிபகவான் ஏற்கனவே கும்ப ராசியில் வீற்றிருப்பதால், சனி பகவானுடன் சூரிய பகவான் இணைகிறார். இவர்களின் கூட்டணி எந்தெந்த ராசிகளுக்கு பலன் தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்கள் மாசி மாதத்தில் பல வகைகளில் அதிர்ஷ்டமான பலன்களை பெறலாம். வேலையில் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். சம்பள உயர்வு திருப்திகரமாக கிடைக்கும். வேலையில் கடின உழைப்பிற்கான பலன்களை பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் மாசி மாதம் மிகவும் ஏற்ற காலமாக இருக்கும்.

ரிஷப ராசியினர் நினைத்த காரியத்தை செய்து முடிப்பார்கள். வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலையை மாற நினைப்பவர்களுக்கு, இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும்.

துலாம் ராசியினர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவையும் அன்பையும் பெறுவார்கள். குடும்பத்தில் இணக்கமான சூழல் இருப்பதால் மனதில் நிம்மதி ஏற்படும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.. முதலீட்டு திட்டங்கள் வெற்றி பெறும். வருமானமும் அதிகரிக்கும். பிள்ளைகள் இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

தனுசு ராசிகள் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகி, ஒரு புதிய வாழ்க்கையை தொடக்கும் நிலை ஏற்படும். உங்கள் புகழ் உயரும். மேல் அதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டி, கூடுதல் சலுகைகளை வழங்குவார். வெளியூர் பயணங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கும்ப ராசியினரை பொறுத்தவரை, பணவரவு மகிழ்ச்சி தரும். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிரமான நிலையை பெறுவார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் பணிகளை திட்டமிட்டு நிறைவு செய்வீர்கள். புதிதாக போடும் ஒப்பந்தங்களால், வருங்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link