சனி வக்ர நிவர்த்தியின் அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்... இனி எல்லாம் சுகமே...
சனி வக்ர நிவர்த்தி 2024: வரும் நவம்பர் 15ம் தேதி, சனி தனது கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், இனி வரும் காலங்கள் குறிப்பாக 2025, ஆண்டு சில ராசிகளுக்கு பொற்காலமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஷஷ ராஜயோகம்: சனி வக்ர நிவர்த்தி அடையும் போது, சில ராசிகளின் தடைபட்ட வேலைகள் நிறைவேறும். இம்முறை சனி வக்ர நிவர்த்தி அடையவதால் உண்டாகும் ஷஷ ராஜயோகத்தின் பலனும் அதிகரிக்கும். இந்த குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் மிகப்பெரிய பலனைப் பெறலாம்.
அதிர்ஷ்ட ராசிகள்: புத்தாண்டில் சாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற உள்ள இந்த ராசிகளின் தொல்லைகள் விலகும், உத்தியோகத்தில் உயரத்தை அடைவார்கள், வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி: வேலையில், தொழிலில் நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறலாம். பணியிடத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். எல்லா வகையிலும், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மொத்தத்தில் சனியின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கடக ராசி: சனியின் வக்ர நிவர்த்தி கடக ராசிகளுக்கு, சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உங்கள் பணி வேகமெடுக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
கும்ப ராசி: சனி வக்ர நிவர்த்தி அடைவது கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஷஷ ராஜயோகத்தின் சுப பலன்களால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதில் வெற்றி பெற நல்ல வாய்ப்புகள் உள்ளன.
சனி பரிகாரங்கள்: சனி பகவானின் அருளை பெற ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். பசுக்கள், காகங்களுக்கு உணவளிப்பதும் சனீஸ்வரனை மகிழ்விக்கும். அதோடு, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, பாராயணம் செய்யலாம். சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்குவது விசேஷம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.