எந்த கிழமையில் பிறந்தவர் ஆக்ரோஷமானவர்? திங்கள் முதல் ஞாயிறு வரை! பிறந்த கிழமை பலன்கள்
ஜாதகம் பார்த்து பலன் சொல்வதற்கும், பிறந்த தேதி, பிறந்தகிழமைகளின் அடிப்படையில் பலன் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. தேதி மற்றும் கிழமைகளின் அடிப்படையில் சொல்வது உலகம் முழுவதும் உள்ள வழக்கம் ஆகும். எந்த கிழமையில் பிறந்தவர் எந்த குணநலனுடன் இருப்பார்? திங்கள் முதல் ஞாயிறு வரை....
சகிப்புத் தன்மை, பெரியவர்களிடம் மரியாதை, கடவுள் பக்தி கொண்டவர்களாக திங்கட்கிழமை பிறந்தவர்கள் இருப்பார்கள். நுண்ணறிவும், கற்பனை சக்தியும் கைகூடியவர்களாக இருக்கும் திங்கட்கிழமை பிறந்தவர்கள், எதிரிகளையும் நண்பர்களாக நினைக்கும் சாமர்த்தியர்கள்
நியாயமானவர்கள், தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாணயமானவர்கள். யார் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் கொள்கைவாதிகள். எந்த விஷயமாக இருந்தாலும், மனம் திறந்து பேசக்கூடிய வெளிப்படையானவர்களாக செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் இருப்பார்கள்
பல்வேறு திறமைகளை கொண்டவர்களாக இருக்கும் புதன்கிழமையில் பிறந்தவர்கள், ரகசியங்களை காப்பதில் வல்லவர்கள். மற்றவர் உணர்வுகளை புரிந்து செயல்படும் தன்மை கொண்டவர்கள் புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். பிறர் ரசிக்கும்படி நல்ல பேச்சாற்றல் கொண்டவர்கள், இளமையான தோற்றம் கொண்டவர்கள். அறிவுத்திறனால் முன்னேற்றம் காண்பவர்கள்...
குரு ஆதிக்கம் உள்ள வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் ஒழுக்கம், பண்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு தெரிந்ததை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் தாராள மனதுக்காரர்கள். சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடியவர்கள் மட்டுமல்ல, நீதி, நியாயம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிப்பார்கள்.
சுக்ரன் ஆதிக்கம் பெற்ற ஆடம்பர பிரியர்கள். கல்வியிலும், கலைகளிலும் விருப்பம் கொண்டவர்கள், அனைவரையும் கவரும் அழகு மற்றும் அறிவுடன் செயல்படும் இவர்கள், காரியத்தை கச்சிதமாக முடிப்பார்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தால் சுகவாசிகளாக இருப்பார்கள்.
சனிக்கிழமையில் பிறந்தவர்கள், நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணம் உடையவர்களாக கருதப்படுவார்கள். நீதி நேர்மைக்குக் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் கடமைக்கு கட்டுப்பட்டவர்கள். பெரியோர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருக்கும் இவர்களுக்கு பிறருடைய கஷ்டங்களை தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும், தங்களது பரோபகார குணத்தை மாற்றிக் கொள்ளாமல் உதவி செய்துக் கொண்டே இருப்பார்கள்.சனி ஆதிக்கம் கொண்ட சனிக்கிழமையில் பிறந்தவர்கள், எதையும் கூர்ந்து ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களை அறிந்த பின்னரே காரியத்தில் கால் வைப்பார்கள்
ஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்ற சாமர்த்தியசாலிகள். மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்யும் பண்பை இயல்பிலேயே பெற்ற இவர்களுக்கு அதிகாரம் செய்யும் பணியே கிடைக்கும். நேர் வழிகளில் முன்னேறும் இவர்கள், உணர்வுபூர்வமாக மற்றவர்களை அணுகுவார்கள்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது