ஏழரை சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க ராசிகளுக்கு ஏற்ற ‘சில’ எளிய பரிகாரங்கள்!
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அனுமன் கவசம் பாராயணம் செய்தால் சனி தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.
ரிஷபம்: ஹனுமான் கோவிலிலோ அல்லது வீட்டிலோ ராமாயணத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம்: ஆரண்யக் காண்டம் பாராயணம் செய்யவும். இதற்குப் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றிவதோடு, பசுவுக்கு உணவளிக்கவும்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் ஹனுமான் கவசத்தை பாராயணம் செய்து, மலர்களால் ஹனுமனை பூஜித்து, அந்த மலர்களை நீர் நிலைகளில் சேர்க்கவும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் தினமும் ஹனுமான் சாலீசா பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும். ஹனுமனின் படத்தின் முன் நெய் விளக்கை ஏற்றவும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களும் சுந்தர காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் ஹனுமனின் ஆசி பெற, ஹனுமான் அஷ்டகம் பாராயணம் செய்ய வேண்டும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் அயோத்தியா காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேலும், ஹனுமானுக்கு வெண்ணை சாற்றி வழிபடவும்.
மகரம்: மகர ராசிக்காரர்கள் கிஷ்கிந்தா காண்டம் பாராயணம் செய்ய வேண்டும். மேலும், ஹனுமானுக்கு சிவப்பு பயறு பிரசாதம் செய்து நைவேத்தியம் செய்யலாம். அதோடு மீன்களுக்கு உணவளிக்கவும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் உத்தர காண்டம் பாராயணம் செய்யவும். மேலும், ஹனுமான் இனிப்பு வகை ஒன்றை தயாரித்து பிராசாதத்தை விநியோகிக்கவும். அதை எறும்புகளுக்கு உணவளிப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்கள் ஹனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)